விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேலவைத் தேர்தலில் வாக்குரிமை இல்லாததால் ஆசிரியப் பயிற்றுநர்கள் அதிருப்தி

மதுரை, அக். 26:    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மேலவைத் தேர்தலில் பட்டதாரிகள் பிரிவில் வாக்களிக்க அனுமதி இருந்தபோதிலும், ஆசிரியர் தொகுதியில் வாக்களிக்க  அனுமதிக்கப்படாததால் அனைவருக்கும் கல்வித் திட்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:57 pm

வே.சுந்தரேஸ்வரன்

மதுரை, அக். 26:    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மேலவைத் தேர்தலில் பட்டதாரிகள் பிரிவில் வாக்களிக்க அனுமதி இருந்தபோதிலும், ஆசிரியர் தொகுதியில் வாக்களிக்க  அனுமதிக்கப்படாததால் அனைவருக்கும் கல்வித் திட்ட ஆசிரியப் பயிற்றுநர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 தமிழக சட்ட மேலவைத் தேர்தல் நடத்துவதற்காக, பட்டதாரிகள் பிரிவு மற்றும்  ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன.  மதுரையில் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதியில் வாக்காளர்களைச் சேர்ப்பதற்காக தெற்கு, வடக்கு, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி தாலுகா அலுவலகங்களிலும், மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இம்முகாமில் பட்டதாரி பிரிவைவிட ஆசிரியர்கள் தொகுதியில் குறைவான அளவே விண்ணப்பங்கள் வந்துள்ளன.

   ஆசிரியர் தொகுதியின் கீழ் வரும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், கல்லூரி ஆசிரியர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையும், போட்டியிடும் உரிமையும் மேலவைத் தேர்தலில் அளிக்கப்பட்டுள்ளன. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அந்த உரிமை அளிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் பட்டதாரிகளாக இருந்தால், பட்டதாரி பிரிவில் வாக்களிக்கவும் போட்டியிடவும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

 இதனிடையே, அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து வருவதால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்துவள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்  மாநில துணைத் தலைவர் எம். முத்துக்குமரன் கூறியதாவது:  தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் சுமார் 6 ஆயிரம் ஆசிரியர்பயிற்றுநர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் இளங்கலைப் பட்டத்துடன் பி.எட். பட்டமும் முடித்தவர்கள்.  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியப் பயிற்றுநர்களாக அரசால் நியமிக்கப்பட்டவர்கள். பணியில் சேரும்போதே  ஆசிரியப் பயிற்றுநர்களாகவும், தேவைப்பட்டால் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு  மாற்றப்படக் கூடும் என்றும் அவர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது.

  இந்நிலையில், தமிழக சட்ட மேலவைத் தேர்தலில் ஆசிரியர் தொகுதியில் போட்டியிடவும், வாக்களிக்கவும் எங்களுக்கு அனுமதி அளிக்க தேர்தல் விதியில் இடம் தரவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.      ஆசிரியர்களுக்குப் பயிற்றுவிக்கும் எங்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்படவில்லையென்றால், வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு மட்டும் அந்த அனுமதி அளிக்கப்படுகிறதே அது ஏன்?

 பணியில் சேரும்போது ஆசிரியர் பணிக்கு மாற்றப்படக்கூடும் என்று  தெரிவிக்கப்படும் நிலையில், உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகுதியுள்ள எங்களை புறக்கணிக்கும் செயலாகும். ஆசிரியப் பயிற்றுநர்களையும் ஆசிரியர் தொகுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மு.கல்யாணியிடம் கேட்டபோது, ஆசிரியர் தொகுதியில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களையும் வாக்காளர்களாகச் சேர்ப்பதற்காக நீதிமன்றம் மூலம் தீர்வுகாண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.