போடி, ஜன. 8:போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சுப்புராஜ் நகரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இம் முகாமில் பங்கேற்ற மாணவர்கள், கோவில் வளாகம், தியாகி சோணைமுத்து சிறுவர் பூங்கா, 1-வது வார்டு நகராட்சி பள்ளி மற்றும் வட்டார வள மைய வளாகம், அரசு மருத்துவமனை, போடி நீதிமன்ற வளாகம் ஆகியவற்றை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.செல்வக்குமார், உத்தமபாளையம் முதன்மைக் கல்வி அலுவலர் கே.பார்வதி, மாவட்ட தொடர்பு அலுவலர் சிந்தாமதார் மைதீன் ஆகியோர் பேசினர்.
பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளில் போடி மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.கே.மெஹபூப் அலிகான், ஆசிரியர்கள் மனோகரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாம் நிறைவு நாளில், சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பள்ளித் தலைவர் சி.ராஜகோபால் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. செயலர் எஸ்.அய்யப்பராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் எம்.சோமசுந்தரம் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர் ஏ.கண்ணன் முகாம் அறிக்கை வாசித்தார்.
பள்ளி முன்னாள் செயலாளர் எஸ்.எம்.ராமசுப்பிரமணியம், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசினர். உதவித் தலைமை ஆசிரியர் செüந்தரராஜன் நன்றி கூறினார்.