அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

என்.எஸ்.எஸ். மாணவர்களுக்குப் பாராட்டு

போடி, ஜன. 8:போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சுப்புராஜ் நகரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இம் மு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

போடி, ஜன. 8:போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சுப்புராஜ் நகரில் நடைபெற்ற சிறப்பு முகாமில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இம் முகாமில் பங்கேற்ற மாணவர்கள், கோவில் வளாகம், தியாகி சோணைமுத்து சிறுவர் பூங்கா, 1-வது வார்டு நகராட்சி பள்ளி மற்றும் வட்டார வள மைய வளாகம், அரசு மருத்துவமனை, போடி நீதிமன்ற வளாகம் ஆகியவற்றை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.செல்வக்குமார், உத்தமபாளையம் முதன்மைக் கல்வி அலுவலர் கே.பார்வதி, மாவட்ட தொடர்பு அலுவலர் சிந்தாமதார் மைதீன் ஆகியோர் பேசினர்.

பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளில் போடி மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ.கே.மெஹபூப் அலிகான், ஆசிரியர்கள் மனோகரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முகாம் நிறைவு நாளில், சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பள்ளித் தலைவர் சி.ராஜகோபால் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. செயலர் எஸ்.அய்யப்பராஜன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் எம்.சோமசுந்தரம் வரவேற்றார். நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர் ஏ.கண்ணன் முகாம் அறிக்கை வாசித்தார்.

பள்ளி முன்னாள் செயலாளர் எஸ்.எம்.ராமசுப்பிரமணியம், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசினர். உதவித் தலைமை ஆசிரியர் செüந்தரராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.