இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விவசாய நிலம் வாங்குவதற்கு ஆதி திராவிட மகளிருக்கு வங்கிக் கடன் மானியம்

தேனி, ஜன. 8:தேனி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மகளிருக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ நிறுவனம் மூலம் வங்கிக் கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது என

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தேனி, ஜன. 8:தேனி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த மகளிருக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ நிறுவனம் மூலம் வங்கிக் கடன் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பூ.முத்துவீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இந்தத் திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த 18 முதல் 55 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு வங்கிக் கடன் மற்றும் மானியம் வழங்கப்படும்.

5 ஏக்கர் வரை புன்செய் நிலம் அல்லது 2.5 ஏக்கர் வரை நன்செய் நிலம் வாங்குவதற்கு அரசு மதிப்பீட்டின்படி அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீதம் மானியமாகவும், 50 சதவீதம் வங்கிக் கடனாகவும் வழங்கப்படும்.

நிலம் விற்பவர் ஆதி திராவிடர் அல்லாதவராக இருக்க வேண்டும். நிலத்தினை பயனாளியே தேர்வு செய்து, நில உரிமையாளரிடம் விலை பேசி, ரூ.20-க்கான அரசு முத்திரைத் தாளில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த திட்டத்தில் நிலம் கிரையம் பெறுவதற்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. வங்கியில் கடன் பெறுவதற்கு வேறு சொத்துகளின் அடமானம் தேவையில்லை.

மேலும், நிலத்தில் பாசன வசதிகளை மேம்படுத்த 50 சதவீதம் மானியத்தில் ரூ 1 லட்சம் வங்கிக் கடன் பெறலாம். முன்னுரிமை மற்றும் ஒதுக்கீட்டின் அடிப்படையில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தாட்கோ மாவட்ட மேலாளரிடம் விண்ணப்பப் படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் ஜாதிச் சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், நில கிரைய ஒப்பந்தம், கணினி பட்டா, வில்லங்கச் சான்று, சிட்டா அடங்கல் மற்றும் வரைபடம், நிலம் விற்பவரின் ஜாதிச் சான்று ஆகியவற்றை இணைத்து தாட்கோ மாவட்ட மேலாளரிடம் வழங்க வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.