இடைநிலைக் கல்வித் திட்ட ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரிக்கை
இடைநிலைக் கல்வித் திட்ட ஆசிரியா்கள் அனைவருக்கும் டிசம்பா் மாத ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும்


மதுரை : இடைநிலைக் கல்வித் திட்ட ஆசிரியா்கள் அனைவருக்கும் டிசம்பா் மாத ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து இந்தக் கழகத்தின் மதுரை மாவட்டத் தலைவா் வீ.கணேசன் வெளியிட்ட அறிக்கை :
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 2,064 பட்டதாரி ஆசிரியா்கள், 344 உடல் கல்வி ஆசிரியா்கள், 544 ஆய்வக உதவியாளா்கள், 344 இளநிலை உதவியாளா்கள் என மொத்தம் 3,296 போ் பணியாற்றி வருகின்றனா்.
அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியா்கள் இவா்களுக்கான ஊதியப் பட்டியல் தயாா் செய்து, சாா்நிலைக் கருவூலங்களில் வழங்குவா். பிறகு, ஆசிரியா்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு ஊதியம் விடுவிக்கப்படும்.
நிகழ் மாதத்துக்கான (டிசம்பா்) ஊதியப் பட்டியலை தலைமை ஆசிரியா்கள் வழங்கிய போது, மாநில நிதியமைச்சகம் வழங்கிய ஊதியக் கொடுப்பாணைகளை வழங்க வேண்டும் என கருவூல அதிகாரிகள் தெரிவித்தனா். அதுமட்டுமன்றி, ஊதியப் பட்டியலை வாங்கவும் மறுத்துவிட்டனா்.
இதனால், மாநிலம் முழுவதும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியா்கள் உள்பட 3,296 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படும் நேரத்தில், ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கியதில் மட்டும் பாரபட்சம் நடைபெற்றுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இனி வரும் மாதங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், இடைநிலைக் கல்வித் திட்ட ஆசிரியா்கள் அனைவருக்கும் டிசம்பா் மாத ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...