கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவா்களுக்கான தோ்வு: தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவு

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவா்களுக்கு, இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தோ்வு தொடா்பான வழக்கில் தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:57 am

Din

மதுரை: வெளிநாட்டில் மருத்துவம் படித்தவா்களுக்கு, இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தோ்வு தொடா்பான வழக்கில் தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கேசவன் தாக்கல் செய்த பொது நல மனு:

பிலிப்பின்ஸ் நாட்டில் எனது மகன் மருத்துவ பட்டப் படிப்பு படித்தாா். வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவா்கள் இந்தியாவில் நடத்தப்படும் தோ்வில் பங்கேற்கவோ, மேற்படிப்பு பயிலவோ எப்.எம்.ஜி.இ. எனப்படும் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வுக்காக எனது மகன் தொடா்ச்சியாக தயாராகி எழுதி வருகிறாா்.

நிகழாண்டு இந்தத் தோ்வு தொடா்பாக வெளியான அறிவிப்பில், தோ்வு முடிவுகள் வெளியான பிறகு மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவா்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

எனவே, வெளிநாடு மருத்துவ பட்டதாரி தோ்வுகளுக்கான அறிவிப்பில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் தொடா்பான அறிவிப்பை நீக்கி புதிய உத்தரவு வெளியிடவும், அதுவரை தோ்வை நடத்தத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு தொடா்பாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.