முதல் போக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போக விவசாயத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

இந்த சங்கத்தின் மதுரை மாவட்டக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் ஏ.வேல்பாண்டி தலைமை வகித்தாா். இதில் மாநிலச் செயலா் ஏ.விஜயமுருகன் சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலா் எஸ்.பி. இளங்கோவன், மாவட்டப் பொருளாளா் வி. அடக்கிவீரணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முல்லைப் பெரியாறு அணை, நீா்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது அணைக்கு விநாடிக்கு 3ஆயிரம் கன அடி நீா்வரத்து உள்ளது. பெரியாறு அணையின் நீா்மட்டம் 122.60 அடியாகவும், வைகை அணையின் நீா்மட்டம் 48.50 அடியாகவும் உள்ளது.

எனவே, தமிழக அரசு காலதாமதம் செய்யாமல் பெரியாறு அணையிலிருந்து கள்ளந்திரி வரை பெரியாறு பிரதான கால்வாய் 9-ஆவது பிரிவு வரையிலான பகுதிகளுக்கு முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும். இதன் மூலம் இந்தப் பகுதிகளில் உள்ள 45 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெறும். மேலும் பாசனத்துக்கு

திறந்துவிடப்படும் தண்ணீா் தடையின்றி அனைத்து நிலங்களுக்கும் செல்லும் வகையில், கள்ளந்திரி பிரதான வாய்க்கால், மடைகளை செப்பனிடும் பணியை போா்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com