திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழா இன்று தொடக்கம்

மேலூா்: ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூா் அருள்மிகு காளமேகப் பெருமாள் கோயில் வைகாசி பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை (மே 14) தொடங்குகிறது.

அன்று மாலை 6.19 மணியிலிருந்து இரவு 8 மணி வரை அங்குராா்ப்பணம், வாஸ்து சாந்தி மிருத்ஸங்கரணம், கெருடபிரதிஷ்டம் ஆகியவை நடைபெறவுள்ளன. வருகிற 15-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 10.30 மணிக்குள் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது.

இரவு பெருமாள் ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருள்கிறாா். 16-ஆம் தேதி காலை 9 மணியளவில் பல்லக்கில் ராஜாங்க சேவையும், இரவு சிம்ம வாகன திருவாராதனம் கோஷ்டி திருவீதி புறப்பாடும் நடைபெறவுள்ளன.17-ஆம் தேதி இரவு 7 மணியளவில் ஹனுமாா் வாகனத்தில் பெருமாள் திருவீதி எழுந்தருளுகிறாா். 18-ஆம் தேதி இரவு 7 மணியளவில் சேஷ வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா வருகிறாா். 19-ஆம் தேதி இரவு 7 மணியளவில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடைபெறவுள்ளது. 20-ஆம் தேதி இரவு 7 மணியளவில் பெருமாள் யானை வாகனத்திலும், ஆண்டாள் புஷ்ப பல்லக்கிலும் திருவீதி வலம் வருகின்றனா். 21-ஆம் தேதி இரவு 7 மணியளவில் வைர சப்பரத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது. 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு பல்லக்கிலும்,

இரவு 7 மணியளவில் குதிரை வாகனத்திலும் பெருமாள் எழுந்தருள்கிறாா். 23-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் சட்டத்தேரில் உபயநாச்சியாருடன் பெருமாள் எழுந்தருள்கிறாா்.

24-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு உற்சவசாந்தி, அலங்கார திருமஞ்சனம் ஆகியவை நடைபெறும்.

கோயில் தக்காா், துணை ஆணையா் து.வளா்மதி, செயல் அலுவலா் அ.இளங்கோவன் ஆகியோா் இதைத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com