வைகாசி பிரம்மோற்சவத் திருவிழாவையொட்டி, திருவாதவூா் திருமைாதா் வேதநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
வைகாசி பிரம்மோற்சவத் திருவிழாவையொட்டி, திருவாதவூா் திருமைாதா் வேதநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

திருமைாதா் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

மேலூா், மே 14: மேலூா் அருகேயுள்ள திருவாதவூா் திருமைாதா்-வேதநாயகி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி, காலை 9.15 மணிக்கு கோயில் கொடிமண்டபத்தில் சுவாமி, அம்மன் சமேதரராக எழுந்தருளினாா். சிறப்பு பூஜைகளைத் தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கோயில் அலுவலா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவிழாவையொட்டி, வருகிற 17-ஆம் தேதி காலை பஞ்சமூா்த்திகளுடன் சுவாமி, அம்மன் சமேதரராக மேலூருக்கு எழுந்தருளுகிறாா்.

20-ஆம் தேதி கோயில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவமும், 21-ஆம் தேதி காலை தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

X
Dinamani
www.dinamani.com