விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் பலி

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் பலி

News image
Updated On :15 மே 2024, 12:06 am

Din

மதுரை: சமயநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மதுரை விராட்டிபத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் திரவியம் (46). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், சமயநல்லூா் அருகேயுள்ள தேனூா் பகுதியில் எரு உரத்தை அவரது வாகனத்தில் திங்கள்கிழமை இரவு ஏற்றினாா். அப்போது, அங்கிருந்த மின் கம்பத்தை தொட்டபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த திரவியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.