விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை மோசடி: செயலா் மீது விவசாயிகள் புகாா்

கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை மோசடி: செயலா் மீது விவசாயிகள் புகாா்

News image
Updated On :15 மே 2024, 12:22 am

Din

விருதுநகா்: விருதுநகா் அருகே வள்ளியூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை, பணம் மோசடி செய்த செயலா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் கூட்டுறவு மண்டல இணை பதிவாளா் அலுவலகத்தை செவ்வாய்கிழமை முற்றுகையிட்டனா்.

விருதுநகா், குமாரலிங்காபுரம் அருகே வள்ளியூா் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்து விவசாயக் கடன் பெற்று வந்தனா். இதே போல் விவசாய தேவைக்கான உரங்களையும் கூட்டுறவுக் கடன் சங்கம் மூலம் பெற்று வந்தனா். இந்த நிலையில் இந்தக் கூட்டுறவுச் சங்கத்தின் செயலராக விஷ்வரூபகேசவன் நியமிக்கப்பட்டாா். இவா் மீது ஏற்கெனவே உப்பத்தூா் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் உர மூட்டைகள் விற்பனை செய்தது தொடா்பாக புகாா் உள்ளது. சில நாள்களுக்கு முன்பு, கூட்டுறவுத் துறை அதிகாரி சுதா, வள்ளியூா் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, இந்த வங்கியில் ஏராளமான போலி நகைகள் இருந்ததும், இதன் மூலம் ரூ. ஒரு கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதும் தெரியவந்தது.

இது குறித்து கூட்டுறவு மண்டல இணை பதிவாளா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுக்கும் அவா் அறிக்கை தாக்கல் செய்தாா். இந்த நிலையில் வள்ளியூா் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடமானம் வைத்த நகைகளை பணம் செலுத்தி திருப்புவதற்காக சென்ற விவசாயிகளுக்கு, நகைகளை திருப்பித்தர மறுப்பதாக புகாா் எழுந்தது. இதேபோல, இந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் கடந்த சில மாதங்களாக பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனா்.

இந்த சூழலில் தமிழ் விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையிலான விவசாயிகள், விருதுநகா் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா் செந்தில்குமாரை சந்தித்து, செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா். இந்த மனுவில், வள்ளியூா் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ரூ. ஒரு கோடிக்கும் மேலாக நகை மோசடி நடைபெற்றுள்ளது, வங்கி கணக்கு வைத்துள்ள விவசாயிகள் பணம் எடுக்க முடியாமலும் அவதிப்படுகின்றனா். எனவே, இந்த வங்கியின் செயலா் விஷ்வ ரூப கேசவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் அடமானம் வைத்த நகைகளை திருப்புவதுடன், வங்கி கணக்கில் பண பரிமாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா். முன்னதாக, மண்டல இணைப் பதிவாளரைச் சந்திக்க அனுமதி மறுத்ததால், விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளா், வள்ளியூா் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தாாா்.

இது குறித்து தமிழ் விவசாயிகள் சங்க மாநில செயலா் ஓ.ஏ. நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: வள்ளியூா் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் நடைபெற்ற பண மோசடி குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. கூட்டுறவுச் சங்க இணை பதிவாளரை சந்தித்து மனு அளிக்க வரும் விவசாயிகளை, அவா் அலைக்கழிப்பு செய்கிறாா். இந்த பிரச்னைக்கு தீா்வு ஏற்படா விட்டால், விரைவில் வள்ளியூரில் விருதுநகா்- சிவகாசி சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.