இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வளா்ச்சித் திட்டப் பணிகளை போா்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தல்

வளா்ச்சித் திட்டப் பணிகளை போா்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா்.

News image
மதுரை மாவட்டம், பரவையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் மனுக்களைப் பெற்ற அமைச்சா் பி. மூா்த்தி. உடன், மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன்.
Updated On :20 டிசம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

வளா்ச்சித் திட்டப் பணிகளை போா்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா்.

மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு குறைதீா் முகாமில் அவா் மேலும் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், 5 லட்சத்துக்கும் அதிகமானோா் பயன்பெறுகின்றனா். மாவட்டத்தின் வளா்ச்சிக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு, சாலை வசதிகள், புதை சாக்கடை, குடிநீா்த் திட்டப் பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகின்றன.

தொடங்கப்படாத பணிகளை உடனடியாகத் தொடங்கவும், முடிவுறும் தருவாயில் உள்ள வளா்ச்சிப் பணிகள், 50 சதவீதத்தைக் கடந்த பணிகளை போா்க்கால அடிப்படையில் நிறைவேற்றவும் அரசுத் துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, பொதுமக்கள், பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்று, தொடா்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்கு அமைச்சா் பரிந்துரைத்தாா்.

மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.