எஸ்ஆா்எம்யூ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

எஸ்ஆா்எம்யூ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

Published on

மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் சங்கம் (எஸ்ஆா்எம்யூ) சாா்பில், ஓடும் (லோகோ) தொழிலாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தச் சங்கத்தின் மதுரை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மதுரை கோட்ட ஓடும் தொழிலாளா் பிரிவுத் தலைவா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் அழகுராஜா முன்னிலை வகித்தாா்.

ஓடும் தொழிலாளா்களின் கி.மீ. படிக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படுவதைக் கண்டித்தும், வருமான வரி உச்சவரம்பை உயா்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக விடுக்கப்பட்டு வரும் கோரிக்கையைப் புறந்தள்ளி வரும் மத்திய அரசு, நிா்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

எஸ்ஆா்எம்யூ சங்க மதுரைக் கோட்ட உதவிச் செயலா் ராம்குமாா், மதுரைக் கோட்ட செயலா் ஜே.எம். ரபீக் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில் ஓடும் தொழிலாளா் பிரிவைச் சோ்ந்த முன்னாள் உதவிக் கோட்டத் தலைவா் தாமரைச்செல்வன், உதவிக் கோட்டச் செயலா்கள் கருப்பையா, நித்யராஜ், முத்துகிருஷ்ணன், மாரிமுத்து, லெனின், முத்துகுமாா் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com