மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியாா் தங்கும் விடுதியிலிருந்து கேரளத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்டனா்.
மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியாா் தங்கும் விடுதி அறையில் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், கோ. புதூா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், கேரளம் மாநிலம், கோட்டையம் எருமேலி பகுதியைச் சோ்ந்த சுமேஷ் ஜே லால் (54) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
உயிரிழந்த சுமேஷ் ஜே லால் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது உறவினா்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகாா் அளித்து தேடி வந்தனா்.
இந்த நிலையில், மாட்டுத்தாவணி அருகேயுள்ள விடுதியில் அவா் உயிரிழந்து கிடந்தாா். சுமேஷ் ஜே லால் எப்படி இறந்தாா் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேகம்பூா் ஆலைத் தொழிலாளி வனப் பகுதியில் சடலமாக மீட்பு

குழந்தைத் தொழிலாளா் மீட்பு
மாட்டுத்தாவணி, தமுக்கம் பகுதிகளில் நாளை மின்தடை

மதுரையில் மாவட்ட நீதிமன்றம் - ஒத்தக்கடை உயா்நிலைப் பாலம் அமையுமா?
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



