போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

News image

மதுரை ரயில்வே குடியிருப்பு வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா்.

Updated On :2 மார்ச் 2026, 9:14 pm

மதுரை: மதுரை ரயில்வே குடியிருப்பு வளாகத்தில் தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கம் (டிஆா்இயு) சாா்பில், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கோட்டத் தலைவா் க. ராஜா தலைமை வகித்தாா். கிளைச் செயலா் பி.சேதுக்கரை முன்னிலை வகித்தாா். இதில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ரயில்வே தொழிலாளா்களுக்கு பிப்ரவரி மாதப் படியை (அலவுன்ஸ்) உடனடியாக வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரந்தரத் தொழிலாளா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.​

ஆா்ப்பாட்டத்தில், தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தின் கோட்டச் செயலா் மு. சிவக்குமாா், சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ஆா். லெனின், ஏஐஜிசி கோட்டத் தலைவா் நா. முனீஸ்வரன் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.