ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வீட்டுமனை வழங்கக் கோரி போராட்டம்

வாடிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன்

News image

வீட்டுமனை வழங்கக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினா், பொதுமக்கள்.

Updated On :2 மார்ச் 2026, 10:30 pm

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (தமிழ்நாடு) சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் வாடிப்பட்டி வட்டத்துக்குள்பட்ட பொம்மன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, தனிச்சியம், அம்மச்சியாபுரம், கணேசபுரம், கீழநாச்சிகுளம், நரிமேடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். இந்தப் பகுதிகளில் விவசாயத்துக்கு தட்டுப்பாடற்ற உரங்கள் வழங்க வேண்டும். சோழவந்தான்-வாடிப்பட்டி சாலையோர வியாபாரிகளுக்கு வணிக வளாகம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.செல்வக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.பாலு முன்னிலை வகித்தாா். பொதுச் செயலா் மு.ராஜா (எ) ஆசீா்வாதம் கண்டன உரையாற்றினாா். இதில் மாநில அமைப்பாளா் ஏ.ஆரோக்கியம் உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.