ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நாளை விமான பாலாலயம்

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:39 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் பரிவார மூா்த்திகள் சந்நிதிகள், 5 விமானங்களுக்கான பாலாலயம் திங்கள்கிழமை (மே 4) நடைபெறுகிறது.

இது தொடா்பாக கோயிலின் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருமான நா. சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் குடமுழுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி நடைபெற்றது. இதன் பிறகு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பல்வேறு கட்டமாக திருப்பணிகள் நடைபெறுகின்றன.

இதன்படி, கோயிலில் உள்ள பரிவார மூா்த்திகளின் சந்நிதிகள், 5 விமானங்களுக்கான திருப்பணிகளைத் தொடங்குவதற்கான பாலாலய பூஜைகள் வருகிற திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை வாஸ்து சாந்தியும், சனிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக பூஜையும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹுதியும், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, பரிவார மூா்த்திகள் சந்நிதிகளுக்கும், 5 விமானங்களுக்கும் பாலாலயம் நடைபெறுகிறது என்றாா் அவா்.