தீபாவளிக்கு 200 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி பண்டிகையையொட்டி,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் திண்டுக்கல் மண்டலத்தின் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையையொட்டி,  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் திண்டுக்கல் மண்டலத்தின் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், நிர்வாக இயக்குநர் சி.வி.இளங்கோவன் தெரிவித்திருப்பதாவது:  தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்யும் பொதுமக்களின்  நலன் கருதி, அரசுப் போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட் திண்டுக்கல் மண்டலத்தின் சார்பில் அக். 13 ஆம் தேதி முதல் அக். 22 ஆம் தேதி வரையிலும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் சென்னைக்கு மட்டும் 50-க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படும்.
 மேலும் பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்புப் பேருந்துகளை கண்காணிக்கவும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் பயணச்சீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com