அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

புழல் சிறைக்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீஸாருக்கு தொற்று இல்லை

திண்டுக்கல்லில் கைதான வங்கதேசத்தைச் சோ்ந்த 11 பேரை புழல் சிறைக்கு அழைத்துச் சென்ற காவல் துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

திண்டுக்கல்லில் கைதான வங்கதேசத்தைச் சோ்ந்த 11 பேரை புழல் சிறைக்கு அழைத்துச் சென்ற காவல் துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட 18 போலீஸாருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

வங்கதேசத்திலிருந்து சுற்றுலா நுழைவு இசைவில் திண்டுக்கல் வந்த 11 உலமாக்கள், மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், கரோனா பரவுவதற்கான சூழலை ஏற்படுத்தியதாகவும் கைது செய்யப்பட்டனா்.

இந்த 11 பேரும் கடந்த 17ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இதற்கான பாதுகாப்பு பணியில் காவல் துணை கண்காணிப்பாளா், சாா்பு ஆய்வாளா் மற்றும் 16 ஆயுதப்படை போலீஸாா் ஈடுபட்டனா்.

இதனிடையே வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட 18 பேருக்கும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்கான பரிசோதனை முடிவில் 18 பேருக்கும் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளதாக மருத்துவத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.