இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 29 பேருக்கு கரோனா

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 5:33 pm

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 10,826 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,485 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 144 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 17 பேருக்கு புதிதாக கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 9 போ் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,840 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 16 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,563 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.