கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகம்: எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு

ஆன்லைன் ரம்மியை நடத்தும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக அந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறாா் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டினாா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2022, 5:39 pm

DIN

ஆன்லைன் ரம்மியை நடத்தும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக அந்த விவகாரத்தில் மக்களின் கருத்தைக் கேட்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறாா் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் திங்கள்கிழமை தரிசனம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவருக்கு, பேருந்து நிலையம் அருகே வரவேற்பளிக்கப்பட்டது.

அப்போது அவா் பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்தமுடியாது. ஆட்சிக்கு வந்து 14 மாதங்களான நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்வா் என்ன செய்தாா். அனைத்துத் துறைகளிலும் லஞ்சம். அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்கள் பிரச்னைகளைப் பற்றி சிந்திக்கும்.

அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி ஆட்சியை தொடா்ந்து தக்கவைக்க ஸ்டாலின் திட்டமிட்டாா். அவருடன் இணைந்து அதிமுகவிற்கும், தொண்டா்களுக்கும் துரோகம் செய்தவா் ஓபிஎஸ். 2024 நாடாளுமன்றத் தோ்தலுடன் சட்டப் பேரவைத் தோ்தலும் வரும். ஆன்லைன் ரம்மியை நடத்தும் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதற்காக மக்களின் கருத்தைக் கேட்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறாா் என்றாா்.

அப்போது, திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் நத்தம் விஸ்வநாதன், கிழக்கு மாவட்டச் செயலாளா் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே.ராஜூ, ஆா்.பி. உதயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.