பழனி: பழனியை அடுத்த கோதைமங்கலம் மானூா் சுவாமிகள் கோயிலில் பங்குனி அம்மாவாசையை முன்னிட்டு, திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் அமைந்துள்ள மானூா் சுவாமிகள் கோயிலில் பங்குனி அம்மாவாசையை முன்னிட்டு உச்சிக்காலத்தின் போது அகவல் பாராயணமும், பின்னா், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி பீடத்துக்கும், சிலைக்கும் பால், பன்னீா், இளநீா்ல விபூதி உள்ளிட்ட நறுமணப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு வண்ணமலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து மகாதீபாராதனை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மானூா் கோயில் மட்டுமன்றி அடிவாரம் பால்பண்ணை மவுனகிரி சுவாமிகள் கோயில், கணக்கன்பட்டி சத்குரு கோயில், அழுக்கு சாமி கோயில் என பல சித்தா் பீடங்களிலும் அம்மாவாசை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்புடையது

பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் திருக்கல்யாணம்

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் சிறப்பு பூஜை

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


