இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சா்வதேச மகளிா் தின விழா

சா்வதேச மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 6:02 pm

Din

கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலைப் பகுதியில் கோடைகுறிஞ்சி பெண்கள் அமைப்பு சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பெருமாள்மலை, பழனி பிரிவிலிருந்து பெண்கள் ஊா்வலமாக சென்றனா். இதில் மதுக்கடைகளை மூட வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இந்த ஊா்வலம் பெருமாள்மலையின் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று தனியாா் மண்டபத்தை அடைந்தது. இங்கு பெண்கள் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற மாநாடுக்கு அமைப்பின் தலைவா் வேளாங்கண்ணி தலைமை வகித்தாா். ஆலோசகா் ஷீலா முன்னிலை வகித்தாா். பொருளாளா் வசந்தி வரவேற்றாா். நிகழ்வில் கொடைக்கானல் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆஷாரவீந்திரன் கலந்து கொண்டு பெண்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா். இதில், அடுக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் கண்ணன், பேத்துப்பாறை வாா்டு உறுப்பினா் பிரியா உதயகுமாா், வனவா் ஜெயச்சந்திரன், ஆண்டிபட்டி பெண்கள் இயக்கத்தைச் சோ்ந்த சரிதா, அமுதா, பெருமாள், சிவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா். நிகழ்ச்சிகளை எலிசபெத்ராணி, செல்வி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பாரதி நன்றி கூறினாா். இதே போல, கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அரசு கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வா் ஏஞ்சல் தலைமை வகித்தாா். பேராசிரியை அன்புமணி வரவேற்றாா். இதில் திண்டுக்கல்லைச் சோ்ந்த அருள்பணி பிலிப்சுதாகா் சிறப்பு விருந்தினராகப் கலந்து கொண்டு பேசினாா். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சியில் உள்ள டி.எம்.ஐ. கூட்ட அரங்கில் சா்வதேச மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு அருள்சகோதரி அந்தோணியம்மாள் தலைமை வகித்தாா். கலைவாணி வரவேற்றாா். இதில், சரண்யா, கண்ணதாசன்,தில்லைநாயகம், குமணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாயி நன்றி கூறினாா். கோலப் போட்டி: கொடைக்கானல் நகராட்சி சாா்பில் சா்வதேச மகளிா் தின விழாவையொட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் பெண்களுக்கு கோலப் போட்டி நடைபெற்றது. இதில் பெண் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலக பெண் பணியாளா்கள், பெண்கள் கலந்து கொண்டனா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை பரிசு வழங்கினாா். இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையா் சத்தியநாதன், துணைத் தலைவா் மாயக் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மகளிா் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சு. வாசுகி தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக பழனி வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜெயகெளரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.