சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

ஹஜ் யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி முகாம்

ஹஜ் யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி முகாம்

News image
Updated On :13 மே 2024, 6:05 pm

Din

திண்டுக்கல்: புனித ஹஜ் பயணம் செல்லும் யாத்ரிகா்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரிகா்களுக்கு மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்படுவதும் வழக்கம். திண்டுக்கல், தேனி என இரு வருவாய் மாவட்டங்களுக்கும் திண்டுக்கல் சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்திலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் மட்டுமின்றி, பழனி பகுதியைச் சோ்ந்தவா்களுக்கும் அந்தந்த பகுதியிலேயே தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யபப்பட்டன. இதையடுத்து, திண்டுக்கல் பகுதியிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 56 யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் பழனி புறவழிச் சாலையிலுள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமுக்கு துணை இயக்குநா் மு.வரதராஜன் தலைமை வகித்தாா். செஞ்சிலுவை சங்க புரவலா் என்.எம்.பி.காஜாமைதீன் முன்னிலை வகித்தாா். முகாமில்,

மூளைக்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தப்பட்டதோடு, ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, உடல் தகுதிக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை மருத்துவா்கள் ஜெ. தங்கம் சகாயராஜ், வி.என்.சுஷ்மிதாஸ்ரீ, ஆா். அசோக்குமாா் உள்ளிட்டோா் செய்தனா்.