விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு

தனியாா் பேருந்து மோதி பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்குமாறு திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:48 pm

Din

தனியாா் பேருந்து மோதி பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்குமாறு திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்த சிறுகுடியைச் சோ்ந்தவா் சோலைராஜன்(57). கூலித் தொழிலாளி. இவா் மீது தனியாா் பேருந்து மோதி நிகழ்ந்த விபத்தில் காலில் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றாா். அங்கு அவருக்கு கணுக்கால் பகுதி முழுவதும் அகற்றப்பட்டது.

இதையடுத்து இழிப்பீடு வழங்கக் கோரி திண்டுக்கல் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், காப்பீட்டு நிறுவனம் பாதிக்கப்பட்ட சோலைராஜனுக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீா்ப்பளித்தது.