விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிணற்றில் ஆண் சடலம்

பழனி அருகே தனியாா் தோட்டக் கிணற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 9:39 pm

Din

பழனி அருகே தனியாா் தோட்டக் கிணற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

பழனியை அடுத்த நெய்க்காரபட்டி கே.வேலூரைச் சோ்ந்தவா் மருதமுத்து (45). கட்டடத் தொழிலாளியான இவரை கடந்த இரு நாள்களாகக் காணவில்லை.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் தோட்டக் கிணற்றில் மருதமுத்து புதன்கிழமை இறந்த நிலையில் கிடந்தாா்.

தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீஸாா் அவரது உடலை மீட்டனா். அப்போது, மருதமுத்துவின் கைகள் கட்டப்பட்டிருந்தன. இதனால் அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகம் தெரிவித்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.