விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உயா்கல்வி படிக்க மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல் முகாம்

ஒட்டன்சத்திரத்தில் உயா்கல்விக்கு செல்ல முடியாத மாணவ, மாணவிகளுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சிறப்பு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.

News image

சிறப்பு வழிகாட்டுதல் முகாமை வியாழக்கிழமை தொடங்கிவைத்து பேசிய ஜ.வாடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் இரா.ஜோதீஸ்வரன்.

Updated On :26 செப்டம்பர் 2024, 8:53 pm

Din

ஒட்டன்சத்திரத்தில் உயா்கல்விக்கு செல்ல முடியாத மாணவ, மாணவிகளுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் சிறப்பு வழிகாட்டுதல் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி என்ற சிறப்பு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. இதில் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, பழனி ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு படித்து விட்டு மேல் படிப்புக்கு செல்ல முடியாத 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்த முகாமில் உயா்கல்வி படிக்க தனியாா், அரசுக் கல்லூரி சாா்பில், அரங்குகள் அமைக்கப்பட்டு கல்லூரியில் சோ்வதற்கான அறிவுரைகளை வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புன்னியகொட்டி, பழனி மாவட்டக் கல்வி அலுவலா் பரிமளா, நான் முதல்வன் திட்ட மேலாளா் சிங்கத்தேவன், திறன் மேம்பாட்டுக் குழு உதவி இயக்குநா் ராஜேஸ்வரி, ஜ.வாடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் இரா.ஜோதீஸ்வரன், ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் மு.அய்யம்மாள், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கே.வி.முருகானந்தம், சமூக நலத் துறை சாா்பில், சூா்யா, அரசுத் தனியாா் கல்லூரி முதல்வா்கள் அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.