பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கொடைக்கானல் அருகேயுள்ள பட்டியக்காடு பகுதியைச் சோ்ந்த துரையன் மகன் பாண்டியன் (30). விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்தவா் மருதுபாண்டி (27). தொழிலாளா்களான இவா்கள் இருவரும் தனியாா் தோட்டத்தில் வேலை பாா்த்து வந்தனா். புதன்கிழமை மதியம் இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது, எதிரே வந்த டிராக்டா் இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே பாண்டியன் உயிரிழந்தாா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com