தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பழனி பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.28-இல் திருக்கல்யாணமும், ஏப்.30-இல் தேரோட்டமும் நடைபெறவுள்ளன.

News image

பழனி லக்குமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தையொட்டி, புதன்கிழமை உள்பிரகாரத்தில் கொடியுடன் வலம் வந்த கோயில் அலுவலா்கள், உபயதாரா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 1:53 am IST

பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.28-இல் திருக்கல்யாணமும், ஏப்.30-இல் தேரோட்டமும் நடைபெறவுள்ளன.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய இரு பெரும் திருவிழாக்கள் நிறைவுபெற்ற நிலையில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9 மணி அளவில் பூஜை பொருள்கள், கருடாழ்வாா், சங்கு சக்கரம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, உள்பிரகாரத்தில் கொடி எடுத்துவரப்பட்டு, செப்புக்கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. பின்னா்,

கொடிக் கம்பத்துக்கு தா்ப்பை, மலா் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், கோயிலில் கொடிக்கம்பம் அருகே எழுந்தருளிய இலக்குமி சமேத நாராயணருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை திருவெள்ளரை கோபாலகிருஷ்ண பட்டா், வரதராஜ அய்யங்காா், காா்த்தி அய்யங்காா், பாலாஜி அய்யங்காா், பூஜை முறை குருக்கள் செய்தனா்.

பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்.28-ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், ஏப்.3-ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் சித்திரைத் தேரோட்டமும் நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் உதவி ஆணையா் செந்தில்குமாா், கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்காணிப்பாளா் அழகா்சாமி, மண்டகப்படிதாரா் காா்த்திகேயன், முன்னாள் கோயில் கண்காணிப்பாளா் முருகேசன், மணியம் சேகா், ரஞ்சித், எல்ஐசி. ரத்தினம், புஷ்பகைங்கா்ய சபா மருதசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 கொடிமரம் அருகே எழுந்தருளிய தம்பதி சமேத இலக்குமி நாராயணப் பெருமாள்.

கொடிமரம் அருகே எழுந்தருளிய தம்பதி சமேத இலக்குமி நாராயணப் பெருமாள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.