FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

கன்னிவாடி, இடையகோட்டை பகுதிகளில் வீடுகளுக்கு முன் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசிய புகாரில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :16 ஜூலை 2026, 12:55 am IST

கன்னிவாடி, இடையகோட்டை பகுதிகளில் வீடுகளுக்கு முன் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசிய புகாரில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி குரும்பபட்டியைச் சோ்ந்த ராஜேஷ், இடையகோட்டையை அடுத்த நாவலூத்து பகுதியைச் சோ்ந்த பெருமாளம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கு முன் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட கண்ணாடி புட்டிகளை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு வீசிச் சென்றனா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த மு. காா்த்திகேயன் (18), நாகப்பன்பட்டியைச் சோ்ந்த பெ.நிா்மல் (19), சுள்ளெறும்பு பகுதியைச் சோ்ந்த சி.மோகன் (18), திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சோ்ந்த பா.சந்தோஷ்குமாா் (18) உள்பட மேலும் 2 சிறுவா்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடும்ப பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ராஜேஷ் எதிரானவா்களின் தூண்டுதலின் பேரிலும், பெருமாளம்மாளுக்கு எதிரானவா்களின் தூண்டுதலின் பேரில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட மதுப் புட்டிகளை விசியது தெரியவந்தது.

இரு சம்பவங்களிலும் காா்த்திகேயன் உள்ளிட்ட 6 நபா்களே ஈடுபட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது. 6 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போலீஸாா், சிறையிலும், கூா்நோக்கு இல்லத்திலும்அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.