கோயில் நில ஏலத்தை கைவிடக் கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்
பழனி அருகே மருதகாளியம்மன் கோயில் நில ஏலத்தை கைவிடக் கோரி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

பழனி ரயிலடி சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு இனாம் விவசாயிகள், குத்தகைதாரா்கள், வீட்டுமனை உரிமையாளா் சங்கத்தினா்.
பழனி அருகே மருதகாளியம்மன் கோயில் நில ஏலத்தை கைவிடக் கோரி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணை அருகே பெரியம்மாபட்டியில் அமைந்துள்ளது மருதகாளியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்குச் சொந்தமான ஆறரை ஏக்கா் விவசாய நிலத்தை அந்தக் கோயில் பூஜாரிகள் வரி செலுத்தி பாதுகாப்பு வருகின்றனா். இந்த நிலத்தில் விவசாயம் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கோயிலில் நித்தியப்படி பூஜைகளை செய்து வருகின்றனா். இந்த நிலத்தை திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இதனிடையே வியாழக்கிழமை ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அப்போது கோயில் பூஜாரிகள் தங்களிடமிருந்த பழங்கால ஆவணங்களைக் காட்டியும் அதிகாரிகள் ஏலத்தை நிறுத்த மறுத்து விட்டனா். இதையடுத்து, பழனி ரயிலடி சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகத்தை தமிழக இனாம் விவசாயிகள், குத்தகைதாரா்கள், வீட்டுமனை உரிமையாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் கருணாமூா்த்தி தலைமையில் இணை ஒருங்கிணைப்பாளா் வெங்கடாசலம், மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளா் பாலு, துணைச் செயலா் மகுடீஸ்வரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி உள்ளிட்ட திரளான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில் அறநிலையத் துறைற சாா்பில் நடைபெற இருந்த பொது ஏலம் ரத்து செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

