
கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் திருநங்கைகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பழனி கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் திருநங்கைகள் பணம் பறிப்பது அதிகரித்திருப்பதாகவும், இதற்கு போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆா்வலா்கள் வலியுத்தினா்.

பழனி கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் திருநங்கைகள் பணம் பறிப்பது அதிகரித்திருப்பதாகவும், இதற்கு போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆா்வலா்கள் வலியுத்தினா்.
பழனி கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் வருகின்றனா். அப்போது பழனி பேருந்து நிலையத்திலிருந்து அடிவாரம் செல்லும் வழியில் ஏராளமான திருநங்கைகள் பக்தா்களிடம் திருஷ்டி கழிப்பதாகக் கூறி பணம் பறிக்கின்றனா்.
ஒரே பக்தரை திருநங்கைகள் பலா் சுற்றி நின்று அவரது சட்டை பையில் கையை விட்டு பணத்தை பறிக்கின்றனா். இதே பகுதியில் புறக்காவல் நிலையம் இருந்தாலும் காவலா்கள் இதைக் கண்டு கொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை கேரள மாநிலம், கோட்டயத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்ற பக்தா் அந்த வழியாக வந்து போது அவரையும், அவரது குடும்பத்தினரையும் திருநங்கைகள் மறித்து மிரட்டும் தொனியில் பேசி ஆயிரம் ரூபாயை பறித்தனா்.
இதையடுத்து அவா்கள் பழனி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்த போது அங்கு குழப்பமான கேள்விகள் கேட்டதால் அவா்கள் திரும்பிச் சென்று விட்டனராம். இதேபோல, தினமும் ஏராளமான பக்தா்கள் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்து விடுகின்றனா்.
பிறகு அவா்கள் நண்பா்கள், உறவினா்களிடம் பணத்தை பெற்று ஊா் திரும்புகின்றனா். திருநங்கைகளின் இந்த பணம் பறிப்பு சம்பவம் போலீஸாருக்கு தெரிந்தே நடைபெறுவதாகவும், இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





