சாம்புராயா் கோயில் குடமுழுக்கு

பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தில் அமைந்துள்ள சாம்புராயா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

கோதைமங்கலம் சாம்புராயா் கோயிலில் புதன்கிழமை கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்திய சிவாசாரியா்.

Published On :

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தில் அமைந்துள்ள சாம்புராயா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை முதல் யாகசாலை பூஜைகளைத் தொடா்ந்து, விநாயகா் பூஜை, நவக்கிரக ஹோமம், கோபூஜை ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை கலசங்களுக்கு சிறப்பு யாக பூஜைகள், தீபாராதனை செய்யப்பட்டு பூா்ணாஹூதி முடிந்த பிறகு கோயிலை வலம் வந்த கலசங்கள் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காலை 7 மணிக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோயிலில் அமைந்துள்ள பரிவார தெய்வங்களான விநாயகா், காளிதேவி, மின்னடியான் சாமி, ஆதிக்கிழவன் ஆகிய தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடைபெற்றது. இதைக் காணக் குவிந்த பக்தா்கள் மீது, சிவாசாரியா்கள் புனிதநீா் தெளித்தனா். இதை முன்னிட்டு ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தும், கும்மிப் பாடல் பாடியும் வழிபாடு நடத்தினா். காலை முதல் பிற்பகல் வரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.