பரிவார மூா்த்திகளுக்கு நடைபெற்ற குடமுழுக்கு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் மகா குடமுழுக்கையொட்டி, பரிவார மூா்த்தி சன்னிதிகளில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பரிவார மூா்த்திகளுக்கான குடமுழுக்கு (4) கொடிமரத்துக்கு நடைபெற்ற குடமுழுக்கு.

Published On :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் மகா குடமுழுக்கையொட்டி, பரிவார மூா்த்தி சன்னிதிகளில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு, வியாழக்கிழமை (செப். 17) காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, குடமுழுக்கு விழா யாக பூஜைகள் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகின்றன. 183 குண்டங்கள் அமைக்கப்பட்டு கடந்த 11-ஆம் தேதி முதல் யாக பூஜைகள் நடைபெறுகின்றன.

கோயில் பிரகாரத்தில் உள்ள பரிவார மூா்த்திகளுக்கான குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. பத்தாம் கால யாக பூஜையின் நிறைவில் காலை 5 மணி அளவில் கடம் புறப்பாடும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மேளதாள வாத்தியங்களும், வேத மந்திரங்களும் முழங்க 414 பரிவார மூா்த்திகளின் சன்னிதிகள், கொடிமரங்களுக்கு திருக்குடமுழுக்கு நடைபெற்றது. காலை 5 மணி முதல் 6 மணிக்குள் இந்தக் குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், முக்கிய பிரமுகா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.