மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

417 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடி திருமண நிதியுதவி: அமைச்சர் வழங்கினார்

திருமண உதவித் திட்டத்தின் கீழ், 417 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடிக்கு  நலத்திட்ட உதவியை, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருமண உதவித் திட்டத்தின் கீழ், 417 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடிக்கு  நலத்திட்ட உதவியை, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்.

   சமூகநலத் துறை சார்பில், தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவியை வழங்கி அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியதாவது:   கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

 பெண் கல்வியை ஊக்குவிக்கவும், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையிலும் தாலிக்குத் தங்கம் திட்டம் கொண்டு வரப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 39,437 பேருக்கு ரூ. 136 கோடியில் திருமண உதவியும், ரூ.177 கோடிக்கு தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டுள்ளன.

  எவ்விதப் புகாரும் சொல்ல முடியாத அளவுக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் அமைச்சர்களே என்றாலும், தமிழக முதல்வரிடமிருந்து தப்ப முடியாது என்றார்.

  நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், மதுரை மாநகராட்சி துணை மேயர் கு.திரவியம், தெற்கு மண்டலத் தலைவர் சண்முகவள்ளி, பரவை பேரூராட்சித் தலைவர் ராஜா, மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அபுதாஹீர், சமூகநல அலுவலர் இரா. ஆனந்தவள்ளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.