மேலூர் அரசு கல்லூரியில் மாதிரி நாடாளுமன்றம்

மேலூரிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை  மாதிரி நாடா ளுமன்ற கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

மேலூரிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமை  மாதிரி நாடா ளுமன்ற கூட்டம் நடைபெற்றது.
  மதுரை மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பும் மேலூர் அரசு கலைக்கல்லூரி நாட்டுத் தொண்டு திட்டமும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தின.
 இதில் கல்லூரி முதல்வர் ஆர்.சந்திரன் தலைமை வகி த்தார். நேருயுவகேந்திரா ஒரு ங்கிணைப்பாளர் ஜவஹர் முன்னிலை வகித்தார்.
  இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல், சுத்தம், சுகாதாரம், தற்போதைய கல்வித்திட்டமும் நீட்தேர்வும், ஆதார்எண் குளறுபடிகள் அவைகளுக்கான தீர்வுகள் குறித்து மாணவ மாணவியர் விவாதித்தனர். மேலும், கிராமப்புற மேம்பாடு, சமுதாயப் பிரச்னைகள் குறித்தும் மாணவ மாணவியர் காரசாரமாக விவாதித்தனர். நாட்டுத்தொண்டு திட்ட ஒருங் கிணைப்பாளர் ஆர்.ரசல்ராஜ் வரவேற்றார். பேராசிரியர்கள் எம்.ஜஸ்டஸ், எஸ்.செல்வநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com