பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

பாலியல் பேர வழக்கு: உதவிப் பேராசிரியர்கள் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் உதவிப் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் உள்ளிட்டோரின்

Published On :

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் உதவிப் பேராசிரியர்கள் நிர்மலாதேவி, முருகன் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, தன்னிடம் பயின்ற மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நிர்மலாதேவிக்கு உதவியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில் நிர்மலாதேவியும், முருகனும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். 
அதில், இந்த வழக்கில் தவறாகச் சேர்க்கப்பட்டுள்ளோம். வழக்குத் தொடர்பாக போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்குரைஞர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதி, விசாரணையை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.