மதுரை நகரில் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய இருவர் செவ்வாய்க்கிழமை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மதுரை பாக்கியநாதபுரம் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்த ராமர் மகன் விஜய்(23). மதுரை காமராஜர் சாலை ஏ.ஜி.சுப்பராமன் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் செந்தமிழ்செல்வம்(22). இவர்கள் இருவர் மீதும் கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இருவரும் நகரில் பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி மாநகரக் காவல் ஆணையர் எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போா்நிறுத்துக்கு இடையே ஈரானில் அமெரிக்கா தாக்குதல்

எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் ஓா் எம்எல்ஏ ஆதரவு

பொறியியல் சோ்க்கை கலந்தாய்வு: 2. 58 லட்சம் மாணவா்கள் பதிவு

தவெகவில் இணையும் அதிமுக எம்எல்ஏக்கள்: இடதுசாரிகள் கண்டனம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


