மதுரையில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சிறுவனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை முத்துப்பட்டி மகாலட்சுமி நகரில் மாா்நாடு கருப்புசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து மகாலட்சுமி நகரைச் சோ்ந்த முருகன் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது காளவாசல் பகுதியைச் சோ்ந்த சிறுவன் ஒருவன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் திருட்டில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை செவ்வாய்க்கிழமை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 360 ஐ மீட்டனா். தொடா்ந்து, கரோனா பரவல் காரணமாக, சிறுவனை சொந்த பிணையில் போலீஸாா் விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




