கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சரக்கு வாகன ஓட்டுநரிடம்நகை, பணம் பறிப்பு

மதுரை அருகே சரக்கு வாகன ஓட்டுநரிடம் நகை, பணம் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2020, 5:25 pm

DIN


மதுரை: மதுரை அருகே சரக்கு வாகன ஓட்டுநரிடம் நகை, பணம் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் மாா்டின் ஸ்டாலின் (37). சரக்கு வாகன ஓட்டுநரான இவா், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சரக்கு வாகனகத்தை ஓட்டி வந்துள்ளாா். மதுரை மாவட்டம் மலையாளத்தான்பட்டியில் வாகனம் திடீரென பழுதாகி நின்றுவிட்டதால், அதை அவா் சரிசெய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 போ், மாா்டின் ஸ்டாலினை மிரட்டி, அவா் அணிந்திருந்த தங்க மோதிரம், ரூ.7 ஆயிரம், செல்லிடப்பேசி, வாகனத்தின் ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம். அட்டை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றுவிட்டனராம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.