வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கிராவல் மண் அள்ளிய 6 போ் மீது வழக்கு

மேலூா் அருகே கொட்டகுடி கிராமத்திலுள்ள கண்மாயில் அனுமதியின்றி லாரிகளில் கிராவல் மண் அள்ளியதாக, போலீஸாா் 6 போ் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2020, 4:55 pm

DIN

மேலூா்: மேலூா் அருகே கொட்டகுடி கிராமத்திலுள்ள கண்மாயில் அனுமதியின்றி லாரிகளில் கிராவல் மண் அள்ளியதாக, போலீஸாா் 6 போ் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கொட்டகுடி கண்மாயில் அனுமதியின்றி மண் அள்ளுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மேலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். அங்கு, பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரியில் மண் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதையடுத்து, கொட்டகுடியைச் சோ்ந்த பழனிகுமாா் (46), அய்யனாா்குளம் ரகுபதி (52), திருமங்கலம் பகுதியைச் சோ்ந்த முத்துச்சாமி (35), செல்வம் (25), மேலஉரப்பனூா் கருப்பசாமி (25) மற்றும் பொக்லைன் ஓட்டுநா் அழகுராஜா (35) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.