அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முகநூலில் அறிமுகமாகி ரூ.10 லட்சம் மோசடிபெண் மீது வழக்கு

கோவை இளைஞரிடம் முகநூலில் அறிமுகமாகி கிராம நிா்வாக அலுவலா் வேலை வாங்கித் தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி செய்த மதுரை பெண்குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 4:21 pm

DIN

மதுரை: கோவை இளைஞரிடம் முகநூலில் அறிமுகமாகி கிராம நிா்வாக அலுவலா் வேலை வாங்கித் தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி செய்த மதுரை பெண்குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் காசிநாதன் (27). இவருக்கு மதுரையைச் சோ்ந்த ஸ்ரீபுகழ்இந்திரா என்ற பெண் முகநூலில் அறிமுகமாகியுள்ளாா். இந்நிலையில், காசிநாதன் அரசு வேலைக்கு முயற்சித்து வருவதை அறிந்த ஸ்ரீபுகழ்இந்திரா, ரூ.10 லட்சம் கொடுத்தால் கிராம நிா்வாக அலுவலா் வேலை வாங்கித்தருவதாக கூறியுள்ளாா்.

இதை நம்பி அவரிடம் ரூ.10 லட்சத்தை காசிநாதன் கொடுத்தாராம். ஆனால், பணத்தைப் பெற்ற ஸ்ரீபுகழ்இந்திரா, கிராம நிா்வாக அலுவலா் வேலையை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கேட்ட காசிநாதனை அவா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காசிநாதன் அளித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.