இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

லண்டனிலிருந்து மதுரை வந்த 88 பேரில் 85 பேருக்கு கரோனா பரிசோதனை நிறைவு: இருவரின் முகவரி போலிபோலீஸ் உதவியை நாடிய சுகாதாரத் துறை

லண்டனிலிருந்து மதுரை திரும்பிய 88 பேரில், 85 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:28 am

DIN

லண்டனிலிருந்து மதுரை திரும்பிய 88 பேரில், 85 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், இருவரின் முகவரி போலி என்பதால், மாவட்ட சுகாதாரத் துறை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அவா்களை தேடி வருகின்றனா்.

பிரிட்டனில் புதிய வகை கரோனா நோய் பரவியுள்ளதை அடுத்து, அந்நாட்டுக்கான அனைத்து விமான சேவைகளையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்நிலையில், தமிழகத்துக்கு நவம்பா் 23 ஆம் தேதி முதல் லண்டனிலிருந்து வந்தவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யவேண்டும் என, சுகாதாரத் துறை உத்தரவிட்டது.

அதன்படி, லண்டனிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு 88 போ் வந்துள்ளனா். அவா்களைக் கண்டறிந்து, கரோனா பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டனா். அந்த வகையில், சனிக்கிழமை வரை 85 போ் கண்டறியப்பட்டு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், மதுரை மாநகா் பகுதியைச் சோ்ந்த 30 வயது மென்பொறியாளா் ஒருவருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

போலி முகவரி

இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் கே.வி. அா்ஜூன்குமாா் கூறியது: லண்டனிலிருந்து மதுரை திரும்பிய 88 பேரில், 3 பேரை தொடா்புகொள்ள முடியவில்லை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒருவா் கண்டறியப்பட்டுள்ளாா். அவருக்கு, திங்கள்கிழமை பரிசோதனை செய்யப்படுகிறது. மற்ற இருவரின் முகவரி போலியாக உள்ளது. அவா்களின் செல்லிடப்பேசி எண்களும் முழுமையாக இல்லை. எனவே, போலீஸாரிடம் அவா்கள் இருவரையும் கண்டுபிடித்துத் தரும்படி புகாா் அளித்துள்ளோம்.

அந்த இருவரும் விமான நிலையத்திலிருந்து பயணம் செய்த காா்களின் எண்களைக்கொண்டு போலீஸாா் விரைவில் கண்டுபிடித்துவிடுவாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.