மதுரையில் மேலும் 37 பேருக்கு கரோனா: 2 போ் பலி
மதுரையில் மேலும் 37 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியான நிலையில், 2 போ் பலியாகியுள்ளனா்.


மதுரையில் மேலும் 37 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியான நிலையில், 2 போ் பலியாகியுள்ளனா்.
தமிழகத்தில் ஒரே நாளில் 2,334 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த அரசு ஊழியா்கள், வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பியவா்கள், கா்ப்பிணிகள் உள்பட 37 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 51 போ் குணமடைந்தனா். அவா்களை மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி, வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
மதுரை மாவட்டத்தில், இதுவரை 19,051 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், சிகிச்சைப் பலனின்றி 424 போ் உயிரிழந்த நிலையில், 18,231 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் 396 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...