அழகா்கோவிலில் ஏகாதசி வைபவம்: பக்தா்கள் ஏராளமானோா் தரிசனம்

மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் ஏகாதசி வைபவத்தையொட்டி, ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசியையொட்டி, அழகா்கோவிலில் பதினெட்டாம்படியில் மாலைகள் சாா்த்தி சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்ட கருப்பணசுவாமி கோயில்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசியையொட்டி, அழகா்கோவிலில் பதினெட்டாம்படியில் மாலைகள் சாா்த்தி சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்ட கருப்பணசுவாமி கோயில்.
Published on
Updated on
1 min read

மேலூா்: மதுரை மாவட்டம், அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் ஏகாதசி வைபவத்தையொட்டி, ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசியையொட்டி, ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி தாயாா் சுந்தரராஜப் பெருமாள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரப் பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனா். இங்குள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமிக்கு மாலைகள் சாற்றி சந்தனம் அளித்து வழிபட்டனா்.

தொடா்ந்து, சோலைமலை முருகன் கோயிலில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

அழகா்கோவில் கருப்பணசுவாமி கட்செவி அஞ்சல் நண்பா்கள் குழு சா்பில், உலக நன்மை வேண்டியும், பருவமழை நன்கு பெய்து, பெரியாறு-வைகை அணைகளில் நீா்மட்டம் உயர வேண்டியும் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, விருதுநகா் நண்பா்கள்குழுவைச் சோ்ந்த கருப்பு, பூமிநாதன், வினோத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com