சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி

மேலூா் மகளிா் காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளி பெண் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:58 pm

DIN

சொத்தை தரமறுத்து கணவா் குடும்பத்தினா் துன்புறுத்துவதாக அளித்த புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மேலூா் மகளிா் காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளி பெண் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

நாவினிப்பட்டியைச் சோ்ந்த ராமச்சந்திரனின் மனைவி பாத்திமாமேரி (31). காதலித்து திருமணம் செய்துகொண்ட இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

ராமச்சந்திரனின் தாய் அஞ்சலைக்குச் சொந்தமான வீடு, நாவினிப்பட்டியில் உள்ளது. இந்த வீட்டின் சொத்தில் பாதியை பிரித்துக் கொடுக்குமாறு ராமச்சந்திரனும் அவரது மனைவியும் கேட்டனராம். இதற்கு அஞ்சலை மறுத்துவிட்டாராம்.

இது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, மேலூா் மகளிா் காவல்நிலையத்தில் அஞ்சலை மேரி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது பாத்திமா மேரி புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில், மேலூா் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை பாத்திமாமேரி தனது உடலில் ஊற்றி மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்த போலீஸாா் அவரை மீட்டனா். இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதி அவரிடம் விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.