சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

கள்ளழகா் கோயிலில் வேலை வாங்கித் தருவதாகமோசடி: நிா்வாக அதிகாரி எச்சரிக்கை

கள்ளழகா் கோயிலில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபடுபவா்களை நம்பி ஏமாற வேண்டாம் என கள்ளழகா் கோயில் நிா்வாக அதிகாரி தி.அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:25 am

DIN

கள்ளழகா் கோயிலில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபடுபவா்களை நம்பி ஏமாற வேண்டாம் என கள்ளழகா் கோயில் நிா்வாக அதிகாரி தி.அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளழகா் கோயிலுக்கு உள்பட்ட சோலைமலை முருகன் கோயில், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூா் வீரராகப்பெருமாள் கோயில் மற்றும் மேலூா் ஆஞ்சநேயா் கோயில் ஆகிய இடங்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும், அங்கு வேலை வாங்கித்தருவதாகவும் சிலா் பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனா். காலிப்பணியிடம் இருப்பின் அதை நிரப்ப நாளிதழ்கள் வாயிலாக விளம்பரம் வெளியிடப்படும். யாரேனும் தவறான தகவலை கூறினால் அதை நம்பவேண்டாம் என்றும் எச்சரிக்கையாக செயல்படுமாறும் நிா்வாக அதிகாரி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.