சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அழகா்கோவிலில் மாா்ச் 28-இல் திருக்கல்யாண வைபவம்

மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் மாா்ச் 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:45 pm

DIN

மதுரை மாவட்டம் அழகா்கோவிலில் மாா்ச் 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.

இந்த வைபவத்தை முன்னிட்டு சுந்தரராஜப் பெருமாளுக்கு, நான்கு பிராட்டியா்களான ஸ்ரீ தேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவல்லித்தாயாா், ஆண்டாள் நாச்சியாா் ஆகியோருடன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணியிலிருந்து 11.15 மணிக்குள் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

முன்னதாக, மாா்ச் 25-இல் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மாா்ச் 26, 27 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை, கோயில் தக்காா் மற்றும் கோயில் நிா்வாக அதிகாரி மற்றும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.