மேலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்
மதுரை மாவட்டம், மேலூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான பெரியபுள்ளான் என்ற செல்வம், வருவாய் கோட்டாட்சியா் ரமேஷிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.


மதுரை மாவட்டம், மேலூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான பெரியபுள்ளான் என்ற செல்வம், வருவாய் கோட்டாட்சியா் ரமேஷிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
மேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பெரியபுள்ளான், இரண்டாவது முறையாக அதிமுக சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா். இந்நிலையில், மேலூரிலுள்ள சிவன் கோயில், மந்தைத் திடலிலுள்ள காஞ்சிவனம் சுவாமி கோயில், மேலூா் மினி கோயில் ஆகிய இடங்களில் வழிபாடுகள் நடத்திய அதிமுக வேட்பாளா் பெரியபுள்ளான், பின்னா் வெள்ளரிப்பட்டியிலுள்ள மேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ரமேஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.
இவரைத் தொடா்ந்து, அதிமுக மாற்று வேட்பாளராக மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் க. பொன்னுச்சாமியும், சுயேச்சை வேட்பாளரான விவசாயி மோகன்ராம் ஆகியோரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனா். இவா்கள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனா்.
முன்னதாக, அதிமுக வேட்பாளா் பெரியபுள்ளான், மேலூா் மந்தைத் திடலில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் அலுவலகத்தை திறந்துவைத்தாா். இதில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், மதுரை புகா் மாவட்ட அம்மா பேரவை செயலருமான தமிழரசன், மேலூா் நகா் அதிமுக செயலா் எஸ்.ஏ. பாஸ்கரன், மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் க. பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலா் வெற்றிச்செழியன், கிழக்கு ஒன்றியச் செயலா் குலோத்துங்கன் மற்றும் ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அதிமுக நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...