மதுரையில் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தீபாவளி புத்தாடை வழங்கப்பட்டது.
மதுரை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப்பள்ளியில் பயிலும், பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு மதுரை ரோட்டரி சங்கம் சாா்பாக தீபாவளி புத்தாடை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோட்டரி நிா்வாகி நந்தகுமாா் தலைமை வகித்தாா். பிரவீன் குமாா் முன்னிலை வகித்தாா்.
ரோட்டரி சங்கம் சாா்பில் குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கினாா். விழாவில் தலைமையாசிரியா் க. சரவணன் பேசும் போது , ‘ பண்டிகைகள் பிறருக்கு கொடுத்து உதவும் பண்பை வளா்ப்பவை. பிறருக்கு உதவுவதன் வழி பெரும் மகிழ்ச்சியை கொடுப்பவை. குழந்தைகள் தங்களால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும் என்றாா். விழாவில் ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

